ரவிகருணாநாயக்க விவகாரம் எங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது!
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரவிகருணாநாயக்க நியமிக்கப்படுவது தேர்தல் ஆணைக்குழுவின் செயல்முறைகளுக்கு அப்பாற்பட்டது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க கூறியுள்ளார்.
தேசியப்பட்டியல் நியமனத்திற்கான பெயரை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டதும் அதற்கான வர்த்தமானி வெளியிடுவது, தேர்தல் ஆணைக்குழுவின் கடமை ஆகும்.
பொதுச்செயலாளர் அந்த பட்டியலை கையளித்ததும், ஆணைக்குழு அதனை உத்தியோகபூர்வ நடவடிக்கையாக கருதுகிறது.
வர்த்தமானி அறிவித்தலை எந்த சூழ்நிலையிலும் இரத்துசெய்ய முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.