இந்திய பிரஜை ஒருவர் குஷ் போதைப்பொருளுடன் கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 33 வயதுடைய இந்திய பிரஜை ஒருவர் கொண்டு வந்த பயணப் பொதியிலிருந்து 1 கிலோ 900 கிராம் குஷ் போதைப்பொருட்களுடன் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று புதன்கிழமை (20) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.