புதிய சபாநாயகராக அசோக ரன்வல நியமிப்பு!

10 ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக கலாநிதி அசோக ரன்வல வாக்கெடுப்பு இல்லாமல் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரது பெயரை பிரதமர் கலாநிதி ஹரின் அமரசூரிய முன்மொழிந்தார். அமைச்சர் விஜித ஹேரத்வழிமொழிந்தார்.

நாடாளுமன்ற செயலாளர் நாயகம், சபாநாயகர் பதவிக்கு வேறு யாரேனும் பெயர் பரிந்துரைக்கின்றீர்களா என கேட்டபோது, யாரும் பதிலளிக்காமல் அமைதியாக இருந்தனர்.

இதன் பின்னர், கலாநிதி ஹரின் அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத், புதிய சபாநாயகர் அசோக ரன்வலவை அக்கிராசனத்துக்கு அழைத்து சென்றனர், அவர் சபாநாயகராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.