தேசிய பட்டியல் பிரச்சினை எதிர்க்கட்சித் தலைவர் சஜிதினால் நிராகரிப்பு!
ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச, கடந்த புதன்கிழமை கட்சி உறுப்பினர்களுடன் நடந்த சந்திப்பின் போது, தேசிய பட்டியல் விவகாரம் பிரச்சினைக்குரியதாகக் கருதப்படவில்லை என தெரிவித்தார். அவர், யதார்த்தத்தை உணர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம்” என கூறினார்.
தோல்வி மற்றும் பின்னடைவை படிப்பினையாக எடுத்துக்கொண்டு, கட்சியின் உள்நிலை மேம்பாடுகளுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், தோல்வியடைந்தவர்களுக்கு தேசிய பட்டியல் ஆசனங்களை வழங்க முடியாது என அவர் மறுத்தார்.
நாட்டின் தேவையை உணர்ந்த குழுக்களை மட்டுமே இணைப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.