CIDயால் பிள்ளையானுக்கு மீண்டும் அழைப்பு!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை சம்பந்தமாக இன்று (22) மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
சனல் 4 தொலைக்காட்சியின் விசேட காணொளியில், அவரது முன்னாள் செயலாளரான அசாத் மௌலானா, தாக்குதல்தாரிகளுடன் சந்திரகாந்தனுக்கு தொடர்பு இருந்ததாக வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந் நிலையில், கடந்த 20ஆம் தேதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் 5 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.இதனை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைக்காக இரண்டாவது நாளாகவும் இன்று மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.