அதானி திட்டங்கள் பற்றி இலங்கை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் – நிபுணர்கள்
அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உட்பட ஏழு பேருக்கு எதிராக அமெரிக்கா மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தி பிடியாணை பிறப்பித்துள்ளது.
இலங்கையில் நிகழ்ந்த ஊழல்கள் மற்றும் சிலவருடங்களிற்கு முன்னர் பிரிட்டனில் இடம்பெற்ற விசாரணையின்போது எயர்பஸ் நிறுவனத்திடமிருந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்சிற்கான எயர்பஸ் கொள்வனவில் மோசடிகள் ஊழல்கள் இடம்பெற்றதாகவும்
பண்டோரா பேப்பரில் உள்ளுர் அரசியல்வாதிகள்,வர்த்தகர்களின் பெயர்கள் வெளியானதாகவும் கொழும்பை தளமாக கொண்ட வெரிட்டே ரிசேர்ச்சின் நிறைவேற்று பணிப்பாளர் நிசான் டி மெல் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதானி குழுமத்தின் இலஞ்ச ஊழல் தொடர்பான புதிய விபரங்கள் வெளியானதும், இலங்கையில் அதானி குழுமத்தின் வலுசக்தி திட்டங்கள் குறித்து அனுரகுமாரதிசநாயக்க அரசாங்கம் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என பலர் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டுள்ளனர்.