இந்தியாவில் 17,000 வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்!
ஆன்லைன் நிதி மோசடிகளைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்திய உள்துறை அமைச்சு 17,000க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளது.
இந்த கணக்குகளில் பெரும்பாலானவை கம்போடியா, மியான்மர், லாவோஸ் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டன, வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்தியக் குடிமக்களை கம்போடியாவுக்குக் கவர்ந்திழுக்கும் மனித கடத்தல்காரர்கள், ஆன்லைன் நிதி மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்களை செய்ய பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆன்லைன் மோசடிகள் மூலம் ஒவ்வொரு நாளும் சுமார் 6 கோடி இந்திய ரூபாய் மோசடி இடம்பெறுவதாகவும்,
ஆன்லைன் மோசடிகள் தொடர்பில் 92,334 வழக்குகள் பதிவு செய்யப்படுள்ளன என இந்திய உள்துறை அமைச்சின் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் கூறப்படுகிறது.