அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய உத்தரவு

புதிதாக தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு நீதிமன்றில் ஆஜராகத் தவறியமைக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பான வழக்கு தொடர்பில் நீதிமன்றில் ஆஜராக எம்.பி தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், பேஸ்லைன் வீதியில் வீதி விபத்தொன்றில் ஈடுபட்டதுடன், மற்றுமொரு வாகன சாரதியை தாக்கி பலத்த காயம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்து குறித்த பிடியானையானது யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.