தேங்காய் பிடுங்கிய குரங்கால் ஒருவர் பலி
தென்னை மரத்திலிருந்த குரங்கு தேங்காய் பறித்த நிலையில் குரங்கு பறித்த தேங்காய் தலையில் விழுந்து கேகாலை, புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
உயிரிழந்தவர் சம்பவத்தன்று தனது வீட்டிற்கு அருகில் உள்ள தென்னை மரத்திலிருந்து தேங்காய்கள் விழுந்திருப்பதை அவதானித்த நிலையில் அதனைச் சேகரித்து கொண்டிருந்துள்ளார்.
இதன்போது தென்னை மரத்திலிருந்த குரங்கு ஒன்று தேங்காய் பறித்துக்கொண்டிருந்த நிலையில் குரங்கு பறித்த தேங்காய் தலையில் விழுந்துள்ளது.
இதனையடுத்து காயமடைந்தவர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெற்று நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தை என தெரியவந்துள்ளது.
புலத்கொஹுபிட்டிய பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.