11 பேர் விசர் நாய் கடியால் பலி
ஆண்டுக்கு சுமார் 3 இலட்சம் நாய் கடி சம்பவங்கள் நாட்டில் பதிவாகி வருவதாக பொது சுகாதார கால்நடை வைத்திய சேவை தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டில் மட்டும், இந்த கடி சம்பவங்களுக்கு எதிராக சுமார் 2 இலட்சம் மனித ரேபிஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேவேளை, கடந்த ஆண்டில் ரேபிஸ் நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளதையும், அவர்களில் 11 பேர் விசர்நாய்கடி காரணமாக உயிரிழந்ததாகவும், வைத்தியர் யேஷான் குருகே குறிப்பிட்டார்.
மேலும்,
- 1 இறப்பு கலவத்தான் கடி காரணமாகவும்,
- மீதமுள்ள 8 இறப்புகளில் விலங்குகளை தெளிவாக அடையாளம் காண முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாய்க்கடிகள் கடந்த பத்து ஆண்டுகளில் குறைந்துள்ள போதிலும், குரங்கு கடி சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாகும். நாய்க்கடி சம்பவங்களில், நடுத்தர வயதுடையவர்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
மனித ரேபிஸ் தடுப்பூசிகளுக்காக ஆண்டுக்கு ரூ. 600 மில்லியன் செலவிடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.