கச்சான் பருப்பு புரையேறி ஒன்றரை வயது குழந்தை பலி

யாழ்ப்பாணம் சுன்னாகம், ஐயனார் வீதி பகுதியை சேர்ந்த சசிதரன் டனியா என்ற ஒன்றரை வயது குழந்தை, கச்சான் பருப்பு புரையேறியதனால் இன்று (12) உயிரிழந்துள்ளது.

குழந்தை நேற்று (11) கச்சான் சாப்பிட்டபோது புரையேறியதால் சுவாசக் குழாயில் வேர்க்கடலை சிக்கி சிரமத்திற்கு உள்ளானது.

அதன்பின், குழந்தை உறங்கிய நிலையில் இரவில் வாந்தி எடுத்து அழுததை தொடர்ந்து உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று (12) உயிரிழந்தது.

குழந்தையின் சடலத்தின் மீது திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்ட மரண விசாரணையில், சுவாசக் குழாயில் வேர்க்கடலை சிக்கியதே மரணத்திற்கு காரணமாக இருந்தது என்று உடற்கூற்று பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.