போதைப்பொருட்களுடன் ஏழு பேர் காத்தான்குடியில் கைது
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஐஸ், கேரளா கஞ்சா மற்றும் கசிப்பு போன்ற பெருமளவிலான போதைப்பொருட்களுடன் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (12) நடந்த திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் நாவற்குடா, கல்லடி, பாலமுனை, காத்தான்குடி, தாளங்குடா போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 4.590 கிராம் ஐஸ் போதைப்பொருள், 40 பொதிகளில் வைக்கப்பட்ட கேரளா கஞ்சா, மேலும் 21,000 மில்லி லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.