வடக்கில் புலனாய்வு பிரிவில் கடமையாற்றியவர் கொலையாளியா?

இலங்கையை அதிரவைத்த புதுக்கடை நீதிமன்ற படுகொலையாளி கைதாகியுள்ளார். அவர் இலங்கை இராணுவ லெப்டினன்ட் தர அதிகாரியான மொஹமட் அஸ்மான் செரிப்தீன் என்ற 34 வயதுடைய நபராவார்.
இவர் இராணுவத்தில் முன்னாள் லெப்டினன்ட்டாக இருந்திருந்தததுடன் வடக்கில் நீண்டகாலமாக இராணுவ புலனாய்வு பிரிவில் பணியாற்றியவர் என தெரியவந்துள்ளது.
பிரபல போதைபொருள் குற்றவாளியான ‘கணேமுல்ல சஞ்சீவ’வை சுட்டு கொலை செய்த நபர், புத்தளம் பாலவியாவில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.
சட்டத்தரணி வேடத்தில் வந்து அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுகொலையின் துப்பாக்கிதாரி, கடந்த மாதம் 7 ஆம் திகதி கல்கிஸ்ஸை, வட்டரப்பல பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற அதே துப்பாக்கிதாரி என தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியான ரிவோல்வரை, சந்தேகத்திற்குரிய பெண், துப்பாக்கியின் வடிவத்தில் பக்கங்களை வெட்டி, ஒரு குழிவான புத்தகத்திற்குள் மறைத்து நீதிமன்ற வளாகத்திற்குள் கடத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.