தமிழர்கள் தம்மைத் தாமே ஆளும் அரசியல் தீர்வு வேண்டும் – பாராளுமன்றில் சாணக்கியன்

படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியும், தமிழர்கள் தம்மைத் தாமே ஆளும் அரசியல் தீர்வும் வேண்டும் என்பதில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை தாமதப்படுத்துவது நாட்டை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், மக்களை ஏமாற்றினால், கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியைவிடவும் மோசமான விளைவை தற்போதைய அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை (22) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை முன்வைத்தார்.