செவ்வந்தி பற்றிய தகவல் வழங்கினால் சன்மானம் – பொலிசார் அறிவிப்பு

பாதாள உலக கும்பலின் தலைவரான “கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக்கொலை செய்ய நீதிமன்றத்துக்குள் சட்டத்தரணி வேடத்தில் சென்று துப்பாக்கிதாரிக்கு உதவியதாக கூறப்படும் பெண்ணின் புதிய புகைப்படங்களை கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபரான பெண்ணின் விபரங்கள்;
பெயர் – பிங்புர தேவகே இஷாரா செவ்வந்தி
வயது – 25
தேசிய அடையாள அட்டை இலக்கம் – 995892480v
முகவரி – இல. 243/01, நீர்கொழும்பு வீதி, ஜய மாவத்தை, கட்டுவெல்லேகம
இந்த புகைப்படங்களில் உள்ள பெண் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவின் 071 – 8591727 அல்லது 071 – 8591735 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடரப்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.