மலையக தொடருந்து சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்!!

கண்டியிலிருந்து பதுளையை நோக்கி புறப்பட்ட சரக்கு தொடருந்து ஒன்று நானுஓயா தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதில் மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த தொடருந்து இன்று (15) அதிகாலை கண்டியிருந்து பதுளை நோக்கி புறப்பட்ட வேளை நானுஓயா தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் காலை 10 மணியளவில் தடம் புரண்டுள்ளது

இதனால், தொடருந்தில் பதுளை நோக்கி பயணித்த வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.

அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை தொடருந்து திருத்தக் குழுவினர் மேற்கொண்டு வருவதாக நானுஓயா தொடருந்து நிலையத்தின் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.