விசேட சுற்றிவளைப்பில் 331 பேர் கைது

நேற்று (ஏப்ரல் 27) நாடளாவிய ரீதியில் நடைபெற்ற விசேட சுற்றிவளைப்பில் 331 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 98 பேர் ஹெரோயினுடனும், 127 பேர் ஐஸுடனும், 104 பேர் கஞ்சாவுடனும், 2 பேர் ஹஷ் போதைப்பொருளுடன் இருந்ததாக கூறப்படுகிறது.
அத்துடன், ஹெரோயின் 142 கிராம், ஐஸ் 157 கிராம், கஞ்சா 8.4 கிலோ, ஹஷ் 2.4 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளது.