சாவகச்சேரியில் திருட்டு – இருவர் கைது

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட 4 நீர்ப்பம்பிகளுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை, ஆலயம், வீடு ஆகிய இடங்களில் நீர்ப்பம்பிகள் களவாடப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அதன் தொடர்ச்சியாக, சரசாலை மற்றும் மட்டுவில் பகுதிகளை சேர்ந்த 23 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், சரசாலை காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு நீர்ப்பம்பிகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.