வாகன இறக்குமதிக்கு பதிலாக 18வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றலாம்!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக் காக புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச மாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்க முடியும் என முன்னாள் நிதியமைச் சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இணையவழி மூலமான கலந்து ரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மங்கள சமர வீர – நாடாளுமன்ற உறுப்பினர்க ளுக்கு வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு இது உகந்த நேரமா என்றும் கேள்வியெழுப்பினார்.
நாடளாவிய ரீதியில் கொரோனாத் தொற்று தீவிரமடைந்து பாரிய நெருக் கடி ஏற்பட்டிருக்கும் நிலையில் அனை வருக்கும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும் எமது நாடு சுதந்திரம டைந்த பின்னர் உருவான, மிகவும் வறிய நாடாகக் கருதப்பட்ட பங்களாதேசிமிருந்து 20 – 25 கோடி அமெரிக்க டொலர் வரையான கடனை இலங்கை பெறவுள்ளது.
தெற்காசியாவில் அபிவிருத்தியடைந்த நாடாக காணப்படும் இலங்கை, தற்போது பங்களாதேசிடம் கடன் அடிப்படையிலான நிதிப் பரிமாற்றத் தைச் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் விசனம் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் பிழையான கொள் கைகள் காரணமாக நாம் மிகப்பாரிய சமூகப் பேரழிவை நோக்கிப் பயணிப் பது புலனாவதாகவும் இப்படியே சென் றால் நாடு சிரியாவின் நிலையையே அடையநேரிடும் என்றும் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார்.