பிரதமர் ஆகும் நாமலுக்கு ஜனாதிபதி ஆகும் பலன் இல்லை! பிரபல ஜோதிடர் ஆரூடம்!
எதிர்வரும் வருடத்தின்(2022) 9ம் மாதத்திற்குல் மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச இலங்கையின் பிரதமராக நியமிக்கப்படுவார் என பிரபல ஜோதிடர் விஜித ரோஹன விஜயமுனி தெரிவித்துள்ளார்.
குறித்த ஜோதிடர் இணையத்தளத்திள் காணோளி ஒன்றினை வெளியிட்டு இது தொடர்பாக பேசியுள்ளார்.
நாமல் ராஜபக்ஷவுக்கு இலங்கையின் ஜனாதிபதி ஆவதற்கான பலமான கிரகயோகம் இல்லை எனவும் அவர் கூறினார்.
நாமல் ராஜபக்சவின் பிறந்த நேரத்திற்கு அமைய அவரின் கிரகங்கள் எவையும் சக்தி வாய்ந்தவையாக இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்
எனினும் இலங்கையின் அடுத்த பிரதமராக நாமல்ராஜபக்ச விரைவில் பதவிபிரமாணம் செய்வாரென தென்னிலங்கை ஊடகங்கள் சில தகவல்களை நேற்றையதினம் வெளியிட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.