பொது மக்களது வீடுகளுக்கு சீல் வைக்கும் பொலிஸார்! வவுனியாவில் சம்பவம்!
கொவிட் தொற்றாளர்களது எண்ணிக்கை வவுனியாவில் தினமும் அதிகரித்து வருகின்ற நிலையில் அங்குள்ள மக்கள் வீடுகளை கைவிட்டு வேறு பகுதிகளுக்கு தற்காலிகமாக இடம்பெயர்ந்து செல்கின்றனர்.
அவ்வாறு செல்லும் மக்களது வீடுகளிற்கு சீல் வைப்பதற்கான நடவடிக்ககளை சுகாதார அதிகாரிகளும், பொலிஸாரும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தொற்றாளர்கள் இனம் காணப்படுகின்ற பகுதிகளில் தமது வீடுகளை கைவிட்டு செல்வதுடன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாத பகுதியில் உள்ள தமது உறவினர்களது வீடுகளுக்கும் செல்கின்றனர்.
இதனால் பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரையில் தமது வீடுகளை விட்டுவிட்டு தற்காலிக இடம் தேடி சென்ற வவுனியா மக்களுக்கு சொந்தமான நான்கு வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளது.