கோட்டாவின் பொது மன்னிப்பில் துமிந்த சில்வா விடுதலை!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஜனாதிபதி கோட்டாபாயவின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டார்.
அத்துடன் 16 தமிழ் அரசியல் கைதிகள் உட்பட 93 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழே விடுதலை செய்யப்பட்டனர்.
ஹிருனிகா பிரேமச்சந்திரவின் தந்தையான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்றினால் 2016ம் ஆண்டு துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந் நிலையில் ஜனாதிபதின் பொதுமன்னிப்பின் கீழ் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.