குடும்ப ஆட்சிக்கு வாய்ப்பளிக்காதீர்! ஜேவிபி மக்களிடம் வேண்டுகோள்!
குடும்ப ஆட்சிக்கு மக்கள் வாய்ப்பளிக்காது சிந்தித்து செயற்பட வேண்டுமென ஜேவியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டை அபிவிருத்தி செய்வதிலே ராஜபக்ச மும் மூர்த்திகளுமே தோல்வியை கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ராஜபக்ச ஆட்சி ஆரம்பமான காலத்தில் மஹிந்த ராஜபக்ச நாட்டை மேம்படுத்துவார் என கூறினார்கள். அவரின் தோல்வியையடுத்து கோட்டாபய ராஜபக்ச வந்தால் சுபீட்சமான நாட்டை உருவாக்குவார் என்றனர்.
தற்பொழுது அவரும் தோல்வியடைந்தமையினால் பசில் ராஜபக்சவை கூறுகின்றனர். ஆனால் அவராலும் எதனையும் செய்துவிட முடியாது.
பசில் ராஜபக்ச பிறந்தநாள் முதல் அமெரிக்காவின் – லொஸ்ஏஞ்சல்கள் நகரில் வாழ்ந்து இப்பொழுது இலங்கையின் நிலைமையை கண்டு, இங்கு வந்து நிலைமைகளை மாற்ற கூடிய மாயாஜாலக்காரர் அல்ல.
ஏனென்றால், பெரமுன ஆட்சி ஆரம்பித்த நாள் முதல் அவரே இந்த அரசாங்கத்தை நிர்வகித்தார். கொவிட் பரவல் ஆரம்பித்த போது இரு ஜனாதிபதி செயலணிகளை நியமித்தார். அந்த இரு செயலணிகளின் செயற்பாடுகளுமே வெற்றிபெறவில்லை என அவர் தெரிவித்தார்.