தன்னை தானே சுட்டு பொலீஸ் உத்தியேகத்தர் தற்கொலை!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைதானே சுட்டு தற்கொலை செய்த சம்பவம் ஒன்று இன்று(1) வியாழக்கிழமை பதிவாகியுள்ளது.

இதில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர கண்டி மாவட்டத்தினை சேர்ந்தவரஸென தெரியவந்துள்ளது.

பொலிஸ் சாயன்ட் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக  புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவமானது புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பிரதான நுழைவாயில் கவலரனில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது துப்பாக்கியினை எடுத்து தனது தலையில் தானெ  சுட்டு கொண்டுள்ளார்.

இதனை அடுத்து ஆபத்தான நிலையில் இருந்த குறித்த நபரை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

இது குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.