தடுப்பூசி வாங்க கடன் வாங்கும் இலங்கை!
தடுப்பூசி வாங்குவதற்காக சுமார் 15கோடி அமெரிக்க டொலர்களை உலகவங்கியிடம் கடன் வாங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இதுவரை இல்லாத மிகபெரும் அளவிளான சீன நாட்டு கொரோனா தடுப்பூசியான சினோபார்ம் தடுப்பூசிகளை எடுப்பதற்காக 2விமானங்கள் சீனாவிற்கு புறப்பட்டுள்ளன.
இலங்கை ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான குறித்த விமானங்களில் சுமார் 20 இலட்சம் டோஸ்களை கொண்டு வரப்பட உள்ளன.
இரு விமானங்களும் நாளை காலை இலங்கைக்கு திரும்பவுள்ளதாக பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.
அத்துடன் தடுப்பூசி வாங்க ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 15 கோடி அமெரிக்க டொலர்களை கடனான பெற்றுக் கொள்ள திட்டம் இடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.