பொய்யான முறைப்பாடு செய்த பெண்ணுக்கு கிடைத்த தண்டனை!
பெண் சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக பொய்யான முறைப்பாடு செய்த பெண் ஒருவருக்கு மூன்று லட்சம் அபராதத்தினை உச்ச நீதிமன்று விதித்துள்ளது.
கொழும்பு 7ல் வசித்து வரும் பெண் ஒருவருக்கே குறித்த 3இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு இரு ஆண்டு கடூழிய சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையானது ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
விவகாரத்து வழக்கு தொடர்பில் சேவையை பெற்றுகொண்ட போது தொழில் ஒழுக்க விதிகளை மீறி குறித்த பெண் சட்டத்தரணி செயற்பட்டாரென குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குறித்த பெண் உச்ச நீதிமன்றில் பொய்யான தகவல்களை வழங்கி நீதிமன்றை திசைதிருப்ப முயற்சித்ததாக குறித்த பெண் மீது குற்றம் சுமத்தப்பட்;டுள்ளது.
எனினும் விசாரணைகளின் போது பெண் சட்டத்தரணி தவறிழைக்கவில்லை என்பது நிரூபணமாகியது.
இதனை அடுத்து போலி முறைப்பாடு செய்த பெண்ணிற்கு மூன்று லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.