சிறுவர் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு கட்சியில் இடமில்லை!
சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு நபருக்கும் ஐக்கிய தேசிய கட்சியில் உறுப்புரிமை வழங்கப்பட மாட்டாது என கட்சியின் துணை தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்தோடு சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்பவர்களையும், ஏனைய குற்ற செயல்களில் ஈடுபடுவோரையும் அவர்களது பதவிகளை பாராமல் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
அரசியல் பேதமின்றி இது போன்ற குற்றங்கல் குறித்து, குற்றம் சாட்டப்பட்ட அனைத்து நபர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமெனவும் இதன்போது அரசிடம் கோரிக்கை விடுத்தார்.