கட்டாய நடைமுறைக்கு வரும் கொரோனா பாஸ்!
இலங்கையில் கொரோனா தடுப்பூசி ஏற்றியதை உறுதிபடுத்தும் தடுப்பூசி அட்டையினை கட்டாயமாக்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
பொது போக்குவரத்தினை பயன்படுத்தும்போதும் அரச, தனியார் நிறுவனங்களுக்கு செல்லும்போதும் குறித்தநபர் தடுப்பூசியை போட்டாரா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அந்த அட்டையினை கட்டாயப்படுத்தும் விதத்தில் தீர்மானம் எடுக்கபட்டுள்ளது.
எனினும் இதுவரை அதனைக் கட்டாயமாக்குவது தொடர்பில் இறுதி தீர்மானங்கள் எதுவும் எடுக்கபடவில்லை. எனினும் வெகுவிரைவில் இது குறித்த தீர்மானம் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இப்பொழுது தடுப்பூசி போடும் வேலைத்திட்டம் நாடுமுழதும் முன்னெடுக்கப்படுவதோடு, 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை ஏற்றுமாறு சுகாதார தரப்பு வலியுறுத்தி வருகிறது.
அத்தோடு இதுவரை தடுப்பூசி ஒன்றையும் ஏற்றாதவர்களை இனம்கண்டு அவர்களை தடுப்பூசியை போடசெய்யும் வேலைதிட்டம் ஒன்றை கொழும்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் உள்ள அனைவரும் 1வது தடுப்பூசியை பெற்றபின் சுகாதார அட்டை பாவனை கட்டாயமாக்கும் திட்டம் அமுல்படுத்தப்படலாமென அரசதகவல்கள் தெரிவிக்கின்றன.