கோத்தா அரசு தனது திமிர்பிடித்த போக்கை நிறுத்த வேண்டும்!
தற்போதைய அரசு தனது திமிர்பிடித்த நடத்தையினை நிறுத்த வேண்டுமென ஜேவிபியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்தசமரசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
‘கொரோனா குறித்து நாட்டை மூடும் முன் நாடு தானாகவே மூடப்படும்’. இப்போதைய பொருளாதார நெருக்கடியின் போது சுகாதாரத் துறையின் ஆலோசனைகளை அரசாங்கம் புறக்கணித்தமையினால் தற்போது நாடு பெரும் ஆபத்தில் உள்ளது. நாடு இப்படி தொடர்ந்தால் மக்கள் வாழ விடப்படுவார்களா என்றகேள்வி உள்ளது என்றும் கூறினார்.
தினமும் ஊடகங்களில் ஒரு பொலிஸ் செய்தித் பேச்சாளர் தோன்றி, கொவிட் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்களைக் கைது செய்வதாக பெருமை பேசுவார்.
ஆனால் பேருந்துகளில் ஏறும் பெருமளவு பயணிகளின் எண்ணிக்கை இன்னும் பார்க்கப்படவில்லையா என்று கேள்வி எழுப்பினார்.
நாட்டில் தடுப்பூசிகளின் சதவீதத்தை அதிகரிக்க, குறைந்தது ஒரு மில்லியன் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் உலகளாவிய கொவிட் நெருக்கடியுடன், ஒரு நபர் ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசி போட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அரசாங்கம் அதன் திமிர் பிடித்த நடத்தையினை நிறுத்த வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினரை தேவையான முடிவுகளை எடுக்க அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.