அப்துல்லாவால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 10 வயது தமிழ் சிறுமி
மன்னார், தலைமன்னார் கிராமத்தில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக கருதப்படும் 9 வயது சிறுமியின் சடலம் இன்று (17) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடற்கூறாய்வுக்குட்படுத்தப்படவுள்ளது.
தலைமன்னார் கிராமத்தை சேர்ந்த ஆன்கியாஞ்சிதா பெர்னாந்து என்ற ஒன்பதரை வயதான சிறுமி நேற்று அதிகாலை, அவரது வீட்டிலிருந்து 300 மீற்றர்கள் தொலைவில் மீட்கப்பட்டார்.
சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்கிய பின் கொலை செய்தார் என கருதப்படும் தென்னந்தோட்ட காவலாளி பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு, பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.
கைதானவர் திருகோணமலையை சேர்ந்த முஸ்லிம் நபர். எனினும், தமிழர் என்ற போலி அடையாளத்துடனேயே தமது பிரதேசத்தில் இதுவரை தங்கியிருந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
தலைமன்னார் கிராமம் பகுதியில் தென்னம் தோட்டம் ஒன்றை பராமரிப்பதற்காக பணிக்கு அமர்த்தப்பட்ட 52 வயதுடைய ஒருவராலேயே சிறுமி, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த நபர் தனது மனைவியுடன் தலைமன்னார் பகுதியில் வசித்து வந்துள்ளார். அவருடன் பெண்ணொருவனும், மகனும் தங்கியிருந்தனர். அவர்கள் தனது மனைவி, பிள்ளைகள் என கூறி வந்தார். சில காலமாக அவர்கள் அங்கில்லை.
இந்த நிலையில் அருகில் இருக்கும் பெண்மணி ஒருவர் குறித்த சந்தேக நபருக்கு உணவு வழங்கி வந்த நிலையில் அவர்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார். அவரது மகளும், கணவனும் கற்பிட்டியில் தங்கியிருந்து கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களது 4 பிள்ளைகளும், பேத்தியாரின் பராமரிப்பில் வளர்கின்றனர். அந்த பிள்ளைகளுக்கு சந்தேகநபர் அடிக்கடி இனிப்பு வகைகளை வழங்குவது வழக்கம்.
நேற்று வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு அண்மையாக, அயல்வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த சிறுமியை இனிப்பு வாங்கித் தருவதாக குறிப்பிட்டு, கடைக்கு அழைத்து சென்றுள்ளார்.
சிறுமியை அந்த நபர் கடைக்கு அழைத்து சென்றதை, பிரதேசவாசிகள் சிலர் கண்டுள்ளனர். கொல்லப்பட்ட சிறுமியின் தம்பியும் கண்டுள்ளார்.
இரவு 7.30 அளவில் சிறுமியை காணவில்லையென பேத்தியார் தேட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அயலவர்களும் இணைந்து தேடினர். தகவல் பரவி, தலைமன்னார் கிராம மக்கள் ஒன்றிணைந்து பெருமெடுப்பில் தேடுதலில் ஈடுபட்டனர்.
தென்னந்தோட்ட காவலாளி சிறுமியை அழைத்து சென்ற தகவல் பரவியதையடுத்து, பிரதேச இளைஞர்கள்தென்னந்தோட்டத்துக்கு சென்று காவலாளியிடம் விசாரணை செய்தனர்.
தான் சிறுமியை அழைத்து செல்லவில்லையென அவர் தொடர்ந்து கூறினார்.
இதனால் அவரை விட்டு விட்டு சிறுமியை தேடுவதில் இளைஞர்கள் ஈடுபட்டனர்.
எனினும், காவலாளியின் அசாதாரண நடத்தை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் வீட்டு கதவுகளை வெளிப்புறமாக பூட்டி விட்டு உள்ளே பதுங்கியிருந்து விட்டார்.
இதையடுத்து தென்னந்தோட்டத்துக்குள் புகுந்த கிராம மக்கள் வீட்டை சுற்றிவளைத்தனர். வீட்டு கதவை உடைத்துக் கொண்டு உள்நுழைந்து, காவலாளியை பிடித்து வந்து, தர்மஅடி கொடுத்து விசாரணை செய்தனர்.
எனினும், சிறுமியை அழைத்து செல்லவில்லையென காவலாளி தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தார்.
பொலிசாரும் சம்பவ இடத்துக்கு வந்து, காவலாளியை தமது பொறுப்பில் எடுத்தனர்.
அதிகாலை 3.30 மணியளவில், தென்னந்தோப்புக்கு வேலியோரமாக- அடுத்த காணிக்குள் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேடியதையறிந்ததும், சிறுமியின் சடலத்தை காவலாளி அயல் காணிக்குள் வீசியுள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது. முள்வேலியில் சிக்கி சிறுமியின் ஆடைகள் கிழிந்திருந்தன.
சிறுமியின் சடலத்தில் மேலாடைகள் மட்டும் அலங்கோலமாக காணப்பட்டது. பிறப்புறுப்பு பகுதிகளில் குருதிப்பெருக்கு காணப்பட்டது.
கைதான நபர் போலி அடையாளத்துடனேயே அங்கு இதுவரை வசித்துள்ளார். அவர் தனது பெயர் விஜேந்திரன் என்றே குறிப்பிட்டு வந்தார். அவர் கைது செய்யப்பட்ட பின்னர் அடையாள அட்டை இலக்கத்தை போலியாகவே முதலில் வழங்கினார். பின்னர், “முறைப்படி கவனித்து“ விசாரித்த போது, சரியான இலக்கத்தை வழங்கினார். அதை பரிசோதித்த போதே, அவரது பெயர் அப்துல் ரகுமான் என்பது தெரிய வந்தது. திருகோணமலை? குச்சவெளியை சேர்ந்தவர். அவர் அடையாளத்தை மறைத்து வாழ்ந்து வந்ததும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
குறிப்பிட்ட நபர் போதைக்கு அடிமையானவர் என்பதால், அவரை கிராமத்திலிருந்து வெளியேற்றுமாறு பிரதேசவாசிகள், தென்னந்தோட்ட உரிமையாளரிடம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.
சிறுமியின் உடல், மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, உடற்கூறாய்விற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இன்று காலையில் உடற்கூறாய்வு நடைபெறும்.
இதேவேளை, இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைதானவரை தம்மிடம் ஒப்படையுங்கள், அல்லது தூக்கிலிடுங்கள் என பொதுமக்கள் கொந்தளித்தனர்.