15 வயது சிறுமியை காதலித்த 19 வயது பெண், கைது செய்யப்பட்டது ஏன்?
Sri Lanka Tamil News

தன்னை ஒரு ஆணாக அடையாளம் காட்டி, 15 வயது சிறுமி ஒருவருடன் காதல் தொடர்புகளை பேணி வந்ததுடன், அந்த சிறுமியின் நிர்வாண படங்களை பெற்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட 19 வயது பெண் எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்று மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜராக்கப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
குறித்த சிறுமியும் யுவதியும் சமூக வலைதளம் மூலம் ஒரு வருடமாக காதல் தொடர்பில் இருந்து வந்தமை தெரியவந்துள்ளது.
19வயது யுவதி கைது செய்யப்பட்டதை அடுத்து தன்னிடம் ஆண் என தெரிவித்து காதல் தொடர்புகளை பேணியவர் ஒரு பெண் என பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தெரியவந்துள்ளது.
கலென்பிந்துனுவெவ பகுதியை சேர்ந்த 19 வயது யுவதி சமூக ஊடகங்கள் மூலம் மாத்தறை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் தொடர்புகளை பேணிவந்துள்ளார்.
தொலைபேசியில் ஆண் ஒருவரின் குரல் போல பேசியதாகவும் தெரிவந்துள்ளது.
இந்நிலையில், தம்மை சந்திக்க குறித்த சிறுமி மறுத்ததை அடுத்து சந்தேகநபரான யுவதி சிறுமியிடம் இருந்து பெற்ற முறையற்ற படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தமை தெரியவந்துள்ளது.