மின்சார ஹீட்டரில் இருந்து பரவிய தீயால் 3 மாத குழந்தை பலி

வீட்டின் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று மாத குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் முல்லேரிய அம்பத்தலே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மின்சார ஹீட்டரில் இருந்து பரவிய தீயே இதற்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீட்டில் இருந்து புகை வருவதைக் கண்டு தாயாருக்கு மூத்த பிள்ளை தெரியப்படுத்திய போதே அவர்கள் குழந்தை படுக்கையில் எரிந்து கிடப்பதை பார்த்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹீட்டரை அணைக்காமல் குழந்தையின் தாய் வீட்டை விட்டு வெளியே சென்ற போது ஹீட்டரில் தீப்பிடித்து அதிலிருந்து கசிந்த தீ குழந்தை உறங்கிக் கொண்டிருந்த மெத்தையில் பரவியதாக பொலிஸ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.