30 வயது இளைஞனின் கையை வெட்டி எடுத்து சென்ற ரவுடிகள், யாழில் பேரதிர்ச்சி!
யாழ்ப்பாணம் – வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் நேற்றிரவு வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நேற்றிரவு வாள்களுடன் சென்ற குழு ஒன்று பருத்தித்துறை தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் உள்ள 30 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள் வெட்டு நடாத்தப்பட்டது.
இதன்போது கீழே வீழ்ந்த கை துண்டையும் எடுத்து சென்றுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் மூலம் தெரியவருகிறது.
வாள் வெட்டுக்கு இலக்கான நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதானா வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளார்.
சம்பவத்தில் கையை இழந்தவர் செல்வநாயகம் செந்தூரன் என்ற இளம் குடும்பஸ்தர் ஆவார்.