15 வயது மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 42 வயது ஆசிரியை
15 வயது மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 42 வயது ஆசிரியை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
15 வயதான மாணவனை முத்தமிட்டு பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஹொரணை கல்வி வலய பாடசாலை ஒன்றில் 10ம் வகுப்பு ஆசிரியையான 42 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயார் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த ஆசிரியை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு ஹொரணை நீதிமன்ற நீதவான் சந்தன கலன்சூரிய உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு, சாட்சிகளுக்கு அழுத்தம் வழங்கக் கூடாது என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.