நீராடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவனை கௌவி சென்ற முதலை!! களனி கங்கையில் பரபரப்பு!!
களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவனை முதலை ஒன்று கெளவி சென்றுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது பாட்டியுடன் குறித்த சிறுவன் குளிப்பதற்காக சென்றபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
சிறுவனை நீராடிக் கொண்டிருந்த போது பாட்டியை திடீரென முதலை தாக்கி விட்டு சிறுவனைக் கெளவி சென்றுள்ளது.
கடுவெல வெலிவிட்ட, புனித அந்தோனி மாவத்தையில் வசிக்கும் டிஸ்னா பெரேரா என்ற 9 வயது சிறுவனே இந்தச் சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், சிறுவன் முதலையின் வாயில் சிக்கிக் கொண்டிருந்ததனை தாம் கண்டதாக தெரிவித்தனர்.
சிறுவனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.