இரு மகள்மாரையும் மகனையும் துஷ்பிரயோகம் செய்த தகப்பன்
ஹோமாகம, திபாங்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனது இரண்டு மகள்மாரையும் ஒரு மகனையும் பல வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திட்கு உட்படுத்திய தந்தை ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பத்து வருடங்களுக்கு இவரின் மனைவி பிள்ளைகளை விட்டு சென்றதால், தந்தையுடன் 13 வயது மகன், 16 வயது இளைய மகள் மற்றும் 24 வயது மூத்த மகள் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் தந்தையால் பல வருடங்காளக இரு மகள்களும் 13 வயது மகனும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர்.
தந்தையால் 16 வயது மகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்படி, பொலிஸ் குழு அவர்களின் வீட்டுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மூவரிடமும் விசாரணை நடத்தியதில், சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தந்தையை பொலிஸார் கைது செய்தனர்.