ஜனாதிபதியை கொல்ல இராணுவ புலனாய்வு முயற்சியா?
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயவிற்கு ஆதரவான இராணுவ புலனாய்வு தரப்பின் துணையுடன் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் நாள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை படுகொலை செய்ய முயற்சித்தமை தொடர்பிலான குற்றச்சாட்டொன்று தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கண்டியில் உள்ள முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இதனிடையே அண்மையில் தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது