களுத்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பி ஓட்டம்
களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த களுத்துறை சிறைச்சாலையின் கைதி ஒருவர் கழிவறை ஜன்னல் வழியாக தப்பிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தப்பிச் சென்றவர் வாத்துவ, தெல்துவ, தெவிருகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
2300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த போதே தெற்கு களுத்துறை பொலிஸாரால் ராதவியா கைது செய்யப்பட்டு ஏப்ரல் 29ஆம் திகதி களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கைதி மற்றுமொரு கைதியால் தாக்கப்பட்டு கடந்த 06 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையின் வார்டு இலக்கம் 5ல் சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த ராதவியா, கழிவறைக்குச் செல்வதாகக் கூறி ஜன்னல் வழியாக தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.