கோட்டாவிடம் ஒன்றரை மணி நேரம் வாக்குமூலம் பதிவு

கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பான விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜராகியுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்த நிலையில், இன்று காலை அவர் நேரில் சென்று சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கினார்.