யாழில் காதலி வீட்டுக்கு சென்று தூங்கிய இளைஞன், தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கப்பப்புலம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 22 வயதுடைய இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறீவரதன் சஞ்சிதன் என்ற இளைஞனே இன்று அதிகாலை 12.30 மணியளவில், சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் தனது காதலியின் வீட்டுக்கு சென்று அங்கு உறங்கியதாகவும் அதனையடுத்து 12.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாக காவல்துறை மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது,
தானாகவே தொங்கினாரா அல்லது அடித்து தூக்கில் மாட்டி வைக்கபட்டாரா என மரணத்தின் சந்தேகம் இருப்பதாக இளைஞனின் உறவினர்கள் கூறுகின்றனர்.
உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.