யாழில் குழந்தை பிரசவித்த இளம் தாயும் குழந்தையும் பலி – LBC Tamil
(LBC Tamil) யாழ்பாணத்தில் குழந்தை பிரசவித்த இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று முந்தினம் 31.01.2024 உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாதகல் மேற்கு பகுதியினை சேர்ந்த 28 வயதுடைய அருள்டிசாந்தன் கொலஸ்ரிகா எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த 11 மாதத்திற்கு முன் குறித்த பெண் திருமணம் செய்த நிலையில் ஆறு மாத கர்ப்பிணியாக காணப்பட்டுள்ளார்.
கடந்த 23ஆம் திகதி குறித்த பெண் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று 24ம் திகதி வீடு திருப்பினார்.
இதன்பின் இவருக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டமையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது குழந்தையை பிரசவித்தார். பிறந்த சிசு இரு மணித்தியாலங்களில் உயிரிழந்தது.
இந்நிலையில், குறித்தபெண் வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முந்தினம் உயிரிழந்தார்.
மரணத்திற்கான காரணம் தெரியதா நிலையில் பரிசோதனைக்காக உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.