போனை பார்த்து பஸ்ஸிற்குள் மோட்டார் சைக்கிளை விட்ட யுவதி – இருவர் படுகாயம்1

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் பஸ் ஒன்றும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இரு யுவதிகள் காயமடைந்தனர். இந்த விபத்து சம்பவத்திற்கு போனை பாவித்து கொண்டு மோட்டார் சைக்கிளை செலுத்தியமையே காரணமென தெரியவந்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை (05) காலை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து தெரியவருவதாவது,

விசுவமடுவில் இருந்து  திருகோணமலை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்றும் முல்லைத்தீவில் இருந்து ஒட்டுசுட்டான் நோக்கி சென்ற இரு யுவதிகள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும்    புதுக்குடியிருப்பு குழந்தையேசு  ஆலயத்திற்கு முன்பாகவுள்ள முல்லைத்தீவு பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதுண்டு விபத்திற்கு உள்ளானது.

குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த  இரு யுவதிகளும் படுகாயமடைந்த நிலையில்  புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்  மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து சம்பவத்தில் 23,24 வயதுடைய ஒட்டுசுட்டானை சேர்ந்த யுவதிகளே காயமடைந்துள்ளனர்.

யுவதிகளின் விபத்திற்கு தொலைபேசி பாவனையே காரணமென தெரிய வந்துள்ளது. எனினும் இது தொடர்பான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து  வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.