யாழ் போதனா வைத்தியசாலையில் 11 மாத குழந்தை உயிரிழப்பு
யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் வைத்து காரைநகர் பகுதியை சேர்ந்த 11 மாத குழந்தையான செல்வக்குமார் ஜீவிதா நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
குழந்தைக்கு நேற்று அதிகாலை ஏற்பட்ட சுகயீனம் காரணமாக காரைநகர் வலந்தலை வைத்தியசாலைக்கு பெற்றோர் கொண்டு சென்றுள்ளனர்.
குழந்தை மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
மரண விசாரணைகளை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.