உழவு இயந்திர கலப்பையில் சிக்கி இராணுவ சிப்பாய் பலி

திம்புள்ள பத்தனை இராவணாகொட பிரதேசத்தில் உழவு இயந்திரத்தின் சுழல் கலப்பையில் மோதி இராணுவத்தில் பணிபுரியும் நபர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (20) உயிரிழந்துள்ளார்.
விஜயபாகு கந்த, மஹாவலிகம ஹவன்வெவ பிரதேசத்தில் வசித்து வந்த கொட்டகேபிட்டிய பகுதியை சேர்ந்த தசந்த சந்திக ஹேரத் (32) என்ற திருமணமான இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் இராணுவ சேவையிலிருந்து விடுமுறையில் வீடு திரும்பியதும், உழவு இயந்திரத்தில் தனது வயலை தயார் செய்வதற்காக உழவு இயந்திரத்தை ஸ்டார்ட் செய்யதபோது எதிர்பாராதவிதமாக உழவு இயந்திரத்தின் சுழலும் கலப்பையில் சுற்றப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் சுழலும் கலப்பையில் சுற்றப்பட்டிருந்த நிலையில், ஹட்டன் நீதவான் வந்து சடலத்தை பார்வையிட்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.