விளக்கமறியலில் வைக்கப்பட்ட அருண் சித்தார்த்
யாழ்ப்பாணம் சிவில் சமூக மையம் எனும் பெயரில் ஒரு அமைப்பினை பதிவு செய்து தன்னை யாழ்ப்பாண மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட சிவில் சமூக மையம்போல காட்டிக் கொண்டு திரிபவன் தான் அருண் சித்தார்த்.
நல்லூர் பகுதியில் அமைந்திருக்கும் விடுதி மீது தாக்குதல் நடாத்தி அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை எனும் குற்றச்சாட்டில் இவனும் இவனுடைய சகாக்களும் ஆக மொத்தம் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்
கைது செய்யப்பட்டு ஏழு பேரில் இருவருக்கு சிறிய குழந்தைகள் இருப்பதனால் அவர்களை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்தது
இந்நிலையில் இப்பொழுது அருண் சித்தார்த்தம் அவனது ஏனைய நான்கு சகாக்களும் மே 3ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.