ஊடகவியலாளரை கடத்த முயற்சி: திங்கள் அடையாள அணிவகுப்பு
ஊடகவியலாளர் முருகையா தமிழ் செல்வனை கடத்துவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை அடையாள அணிவகுப்பு நடைபெறவுள்ளதாக முருகையா தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
என் மீது தாக்குதல் மற்றும் கடத்த முயற்சி செய்த சந்தேகநபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். இவர்களை திங்கள் வரை விளக்கமறியலில் வைக்ககுமாறும் அடையாள அணிவகுப்புக்கும் உத்தரவிட்டுள்ளது.
இந்த நபர்கள் ஏற்கனவே பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் என்றும் பல வழக்குகள் உள்ளது என தெரிவிக்கப்படுகிறதெனவும் முருகையா தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.