மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி கொண்டு செல்ல தடை – ஜனாதிபதி உத்தரவு
பொது சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடன் அமுலாகும் வகையில் மாவட்ட, மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் திடீரென விலங்குகள் உயிரிழந்ததை அடுத்து ஜனாதிபதியால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.