பிளாஸ்ரிக் பொருட்கள் வடக்கு பாடசாலைகளுக்கு கொண்டு செல்ல தடை
வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் மாணவர்கள் பிளாஸ்டிக் பொருள்களை கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் வடக்கு மாகாண ஆளுநர் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
வடக்கு ஆளுநர் சார்ள்ஸ் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் பிளாஸ்டிக் பொருள்களை மாணவர்கள் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்.
தினமும் காலை கூட்டத்தின் போது டெங்கு ஒழிப்பு தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும்.
அத்தோடு, மாகாணத்தில் உள்ள அனைத்து அரச திணைக்களங்களிலும் வாராந்தம் துப்பரவு பணிகளை மேற்கொள்ள திணைக்கள தலைவர்கள் அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என கூறினார்.