யாழ் ரியுசனிற்குள் புகுந்த சைக்கிள் கள்ளன்! வீடியோ

யாழ்ப்பாணம் – நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று இன்று (19) காலை திருடப்பட்டுள்ளது.
இது குறித்து கிடைக்கும் தகவலின்படி, கல்வி கற்க வந்த மாணவர் ஒருவருக்குச் சொந்தமான துவிச்சக்கர வண்டியே இவ்வாறு திருடப்பட்டுள்ளது. கல்வி நிலையத்துக்குள் வெளியே இருந்து வந்த நபர் ஒருவர் நுழைந்து, துவிச்சக்கர வண்டியை திருடிச் சென்றுள்ளதும், அந்த நபரின் செயல் அங்கிருந்த சிசிடிவி காமெராவில் பதிவாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
துவிச்சக்கர வண்டியை திருடிச் சென்ற நபர் தொடர்பாகத் தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 
				


