நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவித்ததாக பிக்கு ஒருவர் கைது

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ராஜாங்கனே சத்தராதன தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2023 ஜூன் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அநுராதபுரத்தில் வைத்து தேரரை பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

சக துறவியான பஹியங்கல ஆனந்த சாகர தேரர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், பௌத்த மதத்திற்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையிலும் சத்தராதன தேரர் கருத்து வெளியிட்டதாக முறைப்பாட்டில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.